Categories
மாநில செய்திகள்

“ஊரடங்கு மீறல்”… 9 லட்சத்தை தாண்டிய கைது எண்ணிக்கை… போலீசார் அதிரடி…!!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்களிடமிருந்து 21 கோடிக்கு மேல் காவல்துறையினர் வசூலித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்து கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஊரடங்கை மீறி நடப்பவர்களின்  வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

மேலும் தமிழகம் முழுவதும், 9,80,398 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடப்பட்டுள்ளனர். இதனிடையே 8,86,776 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,87,221 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் அரசு போட்டுள்ள ஊரடங்கை அத்துமீறி திரிந்தவர்களிடம் இருந்து ரூ.21,00,03,093 அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |