திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் திருமலை பாதை வழியாக சென்று வருவது வழக்கம். தற்போது கொரோனா பரவி வரும் சூழலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாகவும், கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதன் காரணமாகவும் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் திருப்பதியில் உள்ள திருமலைப் பாதையில் 20 மின்சார பேருந்து இயக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் திருப்பதி மலைப்பாதையில் நடைபெற உள்ளது. கொரோனா ஊரடங்கு ரத்து செய்யப்பட்டவுடன் மலைப்பாதையில் 20 மின்சார பேருந்துகளும், பாபிவிநாசம் மார்க்கத்தில் 8 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதற்காக திருப்பதியில் பேட்டரி சார்ஜ் செய்யும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.