ஊரடங்கு முடிந்தபிறகு மீண்டும் அரசியலுக்கு வருவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே போயஸ்கார்டனில் காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் என்று தெரிவித்திருந்தார். பின்னர் அடிக்கடி அதிமுக அமைச்சர்களிடம் சசிகலா பேசி வந்தார்.
சமீபத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த பலரும் சசிகலா அம்மாவிடம் பேசிய காரணத்திற்காக அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார். தற்போது சசிகலா அவர்கள் ஊரடங்கு முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலா அவர்கள் தெரிவித்துள்ளதாவது: “ஊரடங்கு முடிந்தவுடன், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று விட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அனைவரும் பார்த்து வியக்கும் படி தனது செயல்பாடுகள் இருக்கும்” எனவும் அவர் கூறியுள்ளார்.