நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தபட்டு வந்தது. இவ்வாறு பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல மாநிலங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், மதுபானக் கூடம், உணவகம், சலூன், உடற்பயிற்சி கூடங்கள் உள்பட அனைத்தும் செயல்பட கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தளர்வுகளை பொதுமக்கள் சரியாக பயன்படுத்துமாறும், தேவையின்றி வெளியே சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.