தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் திரையரங்குகள், உணவகங்கள், சலூன்கள் 5% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல 50% பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.