Categories
மாவட்ட செய்திகள்

ஊரடங்கு விடுமுறையில் விவசாயம் மேற்கொள்ளும் 6ம் வகுப்பு மாணவன்…!!

மன்னார்குடி அருகே  11 வயது மாணவன் இயற்கை முறையில் விவசாயம் செய்து  அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளான்.

மன்னார்குடியை அடுத்த பைங்கநாடு கிராமத்தை சேர்ந்த சுதாகர் அருள்மொழி தம்பதியினரின் 11 வயது மகன் கவின்காரிகி, தனது தங்கையுடன் இந்த விடுமுறையை பயன்படுத்தி தங்களது பெற்றோரின் வழிகாட்டுதலோடு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். 1 ஏக்கர் நிலத்தில் வெண்டை, அவரை, நிலக்கடலை, எள், தர்பூசணி, கீரைகள் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

இதனால் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் கிடைப்பதுடன் எஞ்சியவற்றை விற்பனை செய்து வருமானம் ஈட்டியும் வருகின்றன. ஊரடங்கு விடுமுறையை விவசாய பணிகளுக்கு செலவிடுவது தனக்கு உற்சாகத்தை அளிப்பதாக மாணவன்கவின்காரிகி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாள்.

Categories

Tech |