Categories
மாநில செய்திகள்

“ஊரடங்கு விதிமீறல்”… 9,32,487 பேர் கைது… அதிர்ச்சியில் காவல்துறை..!!

கொரோனா ஊரடங்கை மீறியதால் இதுவரை லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றித் திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், கைது செய்தும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேவை இல்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

இதுவரை தமிழகம் முழுவதும், 9,32,487 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8,47,713 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6,64,841 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.19,49,79,098 அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும்  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமீறல் காரணமாக இத்தனை பேர் கைது செய்யப்படுவார்கள் என்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதாகவே  உள்ளது.

Categories

Tech |