Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்த புதிய திட்டம் ..! வெளியிட்ட பிரபல நாட்டின் பிரதமர் .!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கை படிப்படியாக  தளர்த்துவதற்கு நான்கு நிலைகள் கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு நிலைக்கும்  இடையில் குறைந்தது ஐந்து வாரங்கள் உள்ளன. முதல் நான்கு வாரங்கள் தரவுகளை உன்னிப்பாக கவனித்து, ஒவ்வொரு நிலையில் தரவுகள் அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார். இதன் இறுதி வாரத்தில் வணிகங்களும் ,மக்களும் அடுத்த நிலைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறப்படுகிறது .அதில் முதல் படிநிலை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது .

முதல் கட்டமான மார்ச் 8 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும். மக்கள் பிக்னிக் செல்லலாம். வெவ்வேறு வீட்டை சேர்ந்தவர்கள் வெளியிடங்களில் சந்தித்துக் கொள்வதற்கு அனுமதி உள்ளது. பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்களை சந்திப்பதற்கு ஒருவர் அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டாம் கட்டம், மக்கள் ஆறு நபர்கள் வரை பொது இடங்களில் ஒன்று சேர்வதற்கு மார்ச் 29 முதல் அனுமதிக்கப்படுவார்கள். வெளிப்புற விளையாட்டுகள் ,நீச்சல் குளங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் ,உள்ளூரில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாம் .ஒர்க் ஃப்ரம் ஹோம் முடிந்தவரை செய்வதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.

இரண்டாம் படிநிலையில் உணவகங்கள், உயிரியல் பூங்கா, தீம்பார்க், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் அனைத்தும் ஏப்ரல் 12ஆம் தேதி திறக்கப்படும். பொதுமக்கள் செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் சமூக இடைவெளி கடைப்பிடித்து தான் செல்ல வேண்டும். ஒரு நபர் அல்லது ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக செல்லலாம். திருமண வரவேற்பு நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளில் 15 பேர் வரை ஒன்று சேரலாம். இறுதிச்சடங்கில்  30 பேர் வரை கலந்து கொள்ளலாம்.

மூன்றாம் படிநிலையில், பூங்காக்கள், தோட்டங்கள் போன்ற பொது இடங்களுக்கு 30 பேர் வரை சேர்ந்து போக மே 17 ஆம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படுவார்கள். திருமண விழாக்களுக்கு 30 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். விளையாட்டு உள்ளரங்கில் 1000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். வெளிப்புற விளையாட்டுகளில் 4000 பேர் வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு மையங்கள் மற்றும் குழு உடற்பயிற்சி வகுப்புகள் அனைத்தும் திறக்கப்படும் .

நான்காம் படிநிலையில், ஜூன் 21-ஆம் தேதிலிருந்து அனைவரும் எல்லா பொது இடங்களிலும் ஒன்று சேரலாம்.  கிளப்புகள் திறக்கப்படும், பெரிய பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படும். மேலும் அப்போது எந்த விதமான  சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுமோ அதை கடைபிடிக்க வேண்டும். இதற்கிடையில் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறுகின்றனர்.

Categories

Tech |