Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை தவறாக பயன்படுத்தாதீர்கள் – சென்னை உய்ரநீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்ற தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளால் இயல்புநிலை திரும்பியது போல காட்சி அளிப்பதாகவும், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா முதல் அலையில் காவல்துறை கடுமையாக நடந்தது தற்போது கனிவாக நடந்துகொண்டுதான் காரணமாக மக்கள் சாதகமாக எடுத்துக் கொண்டு உள்ளனர். ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்படவில்லை என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |