Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இதுவரை 3 லட்சம் பேர் கைது… ரூ.3.13 கோடி அபராதம் வசூல்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி வெளியே வருவோரிடம் இருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார்.

அதேசமயம், ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தடுக்க முடியவில்லை. இதன் காரணமாக அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வருவோர் மீது வழக்குப்பதிவு செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளத. அதேபோல, இதுவரை பறிமுதல் செய்த வாகனங்களும் திருப்பி தரப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 7 நாட்களில் திருப்பி தரப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 68,000 என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |