Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை முழு வீச்சில் அமல்படுத்த வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை…!!

நாடு முழுவதும் கோரோனோ வைரஸ் வேகமாக பரவி வரும் வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அவர் ஆலோசனையில் மேற்கொண்டார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது அலுவலகத்தில் இருந்தபடி  தலைநகர் நிலவரங்களையும், பாதிப்புகளையும் தெரிவித்தார்.

இதேபோல தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் தலைமை செயலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் இருந்தவாறு மோடியிடம் தமிழ் நாட்டின் நிலவரங்களை பட்டியலிட்டார். இதேபோல புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் முதலமைச்சர்களும் தங்களது மாநில பாதிப்புகளையும் மோடியிடம் தெரிவித்தனர்.

அப்போது ஊரடங்கு நிலைமையை கேட்டறிந்த மோடி மாநில அரசுகள் 144 தடை உத்தரவை முழுவீச்சில் அமல்படுத்த வேண்டும் என்ற கேள்வி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |