தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி மலையாண்டி கோவில் ஊரணியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் அதே பகுதியில் வசித்த முரளிகிருஷ்ணன்(26) என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்த முரளிகிருஷ்ணன் திருவிழாவை முன்னிட்டு நண்பர்களைப் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து மதுபோதையில் முரளிகிருஷ்ணன் மயங்கி ஊரணியில் விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.