ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தொடர் மழை காரணமாக பொதிகுளம் கிராமத்தில் ஊரணி உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மழை நீரை வெளியேற்றினால் நெற்பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Categories