Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவரை… கீழே அமர வைத்து… அவமதித்த செயலாளர்… கைது செய்த போலீஸ்…!!!

கடலூர் மாவட்டத்தில் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். அந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி ராஜேஸ்வரி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சிந்துஜாவின் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Categories

Tech |