தமிழக சட்ட பேரவையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.. இதில் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர மதிப்பு ஊதியம் ஆயிரத்திலிருந்து 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு மூலம் தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பயன்பெறுவர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் மேம்படுத்தப்படும்.. 550 ஊராட்சிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார்..