Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

கிணத்துக்கடவு அருகே ஊராட்சி மன்றத் தலைவர், அவருடைய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோவிந்தாபுரம் ஊராட்சிப் பகுதியில் நேற்று ஒருதரப்பினர் பொங்கல் விழா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி, அவருடைய கணவர் ஆகியேர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்று காலை கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கவந்த பொதுமக்கள் திடீரென காவல் நிலையம் முன்புள்ள மேம்பாலத்தின் கீழே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை, பொள்ளாச்சியிலிருந்து வந்த அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக திருப்பிவிடப்பட்டன.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், புகார் கொடுக்காமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமில்லை எனத் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி, அவரது கணவர் சண்முகம் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

Categories

Tech |