விவசாயி மண்ணெண்ணெயுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே உப்பார்பட்டி கிராமத்தில் விவசாயியான கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார். அதன்பின் திடீரென தான் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை கீழே வைத்துவிட்டு 3 பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து வீரபாண்டி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயி என்னுடைய நிலத்தில் நான் தென்னை மரங்களை சாகுபடி செய்துள்ளேன். ஆனால் என்னுடைய நிலம் புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர்.
இதனால் என்னுடைய நிலத்தில் உள்ள 35 தென்னை மரங்கள் உட்பட 47 மரங்களை அகற்றுமாறு கூறுகின்றனர். இதை தடுப்பதற்காகத்தான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார். அதன்பின் காவல்துறையினர் விவசாயி இடம் பேச்சு வார்த்தையை நடத்தியதில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.