ஊராட்சி மன்ற தலைவர் விஜயாவின் கணவரை தாக்கிய அண்ணாமலை என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
சங்கராபுரம் அருகே உள்ள அரூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரான விஜயாவின் கணவர் சண்முகம். அந்த கிராமத்தைச் சார்ந்த அண்ணாமலை என்பவர் ஊராட்சி மன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள மரத்தில் மாடுகளை காட்டியதாக கூறப்படுகின்றது. இதைப் பார்த்த ஊ.மா.தலைவர் விஜயா மற்றும் செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் இந்த பகுதியில் மரங்களை கட்டக்கூடாது என கூறியிருந்தார்.
இதனால் கோபமடைந்த அண்ணாமலை இவர்களை தீட்டியதாக சொல்லப்படுகின்றது. இதையறிந்த சண்முகம் தட்டிக் கேட்தற்கு அவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சங்கராபுரம் போலீசாரிடம் சண்முகம் புகார் கொடுத்த நிலையில் அண்ணாமலை மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.