Categories
மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரை அழைக்காமல் பூமி பூஜை… அ.தி.மு.க.- பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது கொழுமங்குழி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை கொண்டாடுவதற்காக கொழுமங்களில் திமுகவினர் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஆனால் இந்த பூமி பூஜைக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியாவை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Categories

Tech |