Categories
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை… விரட்டி சென்று கைது செய்த போலீஸ்… எதுக்கு தெரியுமா…?

புதுக்கோட்டை மாவட்டம், பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் விரட்டி சென்று கைது செய்துள்ளனர்.

கோவையை சேர்ந்த மருத்துவருக்கு ரூபாய் 100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 2.85 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மோசடி செய்துள்ளார். இதையடுத்து கோவையை சேர்ந்த மருத்துவர் காவல்துறையில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை தேடி வந்த காவல்துறையினர், அவர் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தலைமறைவாக இருந்த பன்னீர்செல்வத்தை கைது செய்த போலீசார், தனிப்படை அமைத்து அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |