Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற பெண் தலைவர் தற்கொலை …!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியை அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவராக அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரவீன்குமார் என்ற கணவரும், குழந்தைகளும், உள்ளனர். இவரது மாமனார் கருணாகரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இந்நிலையில் சில மாதங்களாக ஊராட்சி மன்ற பணிகளில் மாமனார் கருணாகரனும், கணவர் பிரவீன்குமாரும் தலையீடு செய்வதாக கூறப்படுகிறது. இதை ஊராட்சி மன்ற தலைவரான இந்திரா கண்டித்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இது ஒருபுறமிருக்க ஊராட்சி மன்றத்தில் 100 நாள் பணி குறித்து இந்திரா மீது மாவட்ட நிர்வாகத்திற்கு ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |