பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார், நாங்கள் ஆண்டாண்டு காலமாக தமிழ் புத்தாண்டு கொண்டாடி கொண்டிருக்கிறோம், இப்போ இவர் கேட்டாரு நாங்கள் இங்குள்ள விஷயங்களை தானே சொல்கிறேன் என்று, நான் கன்னி மரியாவுக்கு இயேசு எப்படி பிறந்தார் என்று என்றாவது நாம் பேசி இருக்கிறோமா ? நான் பேசமாட்டேன். அதே போன்று குரான் குறித்து விமர்சனம் செய்ய மறுப்பார்கள். குறிப்பாக இந்து மதத்தை சார்ந்த நாங்கள் இருக்கக்கூடிய நம்பிக்கைகளை தான் உடைக்கக் கூடிய வேலைகளை செய்கிறார்கள். இது தவறு என்று நாங்கள் சொல்கிறோம்.
திராவிட சிந்தனை உடைய கடவுள் மறுப்பாளர்கள், தி.க காரர்கள் இந்து மதத்தை மட்டும் தான் பேசுகிறார்கள். ஆனால் கடவுள் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் இந்து கோவில் வருமானத்தை எடுத்துக்கொண்டு அனைவருக்கும் கொடுப்போம் என்று சொல்வார்கள். மசூதி வருமானத்தை எடுக்கமாட்டார்கள், சர்ச் வருமானத்தை எடுக்கமாட்டார்கள். ஊராம் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே இது என்ன மாதிரி நியாயம் ?
திருவள்ளுவரை நாங்கள் ஒன்றும் சிதைக்க வேண்டியதில்லை. எங்கள் வள்ளுவனுடைய அடையாளங்களை அழிக்காதீர்கள், நீங்கள் சொல்லக்கூடிய… இந்த திராவிட முன்னேற்ற கழகமோ அல்லது அதற்கு முன்பாக இருந்தவர்கள் சொல்லக்கூடிய இந்த தமிழ் புத்தாண்டு குறித்தான விஷயங்கள் தமிழ் பெயரிலே வருடங்கள் இல்லை என்கின்ற அறிவு நமக்கு முன்பாக இருந்த தமிழ் மன்னர்களுக்கு இருந்ததா? இல்லையா ? அவர்கள் கொண்டாடினார்களா ? இல்லையா ?
அவர்களுக்கெல்லாம் இல்லாத புதிய விதமான பகுத்தறிவினுடைய பரிணாம வளர்ச்சி இன்றைக்கு இந்து மதத்தினுடைய தமிழ் வருடங்களை மட்டும் நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களே, இந்த கிதிரி புதிரி வருடத்தை எல்லாம் நீங்கள் மாற்றுவீர்களா ? என தெரிவித்தார்.