தாய்லாந்தில் புகுந்த ராஜ நாகத்தை இளைஞர் ஒருவர் வெறும் கைகளால் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்தில் உள்ள பனை தோட்டம் ஒன்றில் நான்கரை அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது.இதனை அறிந்து அங்கு சென்ற பாம்பு பிடி வீரரானா Sutee Naewhaad, கழிவுநீர் தொட்டிக்குள் புகுந்து பாம்பை வெறும் கைகளால் பிடித்துள்ளார்.
மேலும் அந்தப் பாம்பு தனது ஜோடியைத் தேடி ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என்றும் அந்த ராஜ நாகத்தை மரங்கள் அடர்ந்த நிலப்பகுதியில் விடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து இளைஞர் ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.