Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பத்தினர் … வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை   காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாரத் நகரில் தொழிலதிபரான ஜேம்ஸ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக கறம்பக்குடிக்கு  தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு  திரும்பி வந்த   குடும்பத்தினர்  கதவு உடைக்கப்பட்டு  இருந்ததை கண்டு அதிர்சியடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த 13 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து ஜேம்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மற்றும்  கைரேகை நிபுணர்கள் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  அங்கு பதிவான  தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும்  நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி  தேடி வருகின்றனர்.

Categories

Tech |