வீட்டில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் நித்யா என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் பின்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 20 பவுன் தங்க நகைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.