வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் விஸ்வநாதன்-அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் விஸ்வநாதரின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.