ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெலகலஹள்ளி கிராமத்தில் நித்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து கிருஷ்ணகிரியில் இருக்கும் ஒரு சினிமா தியேட்டர் அருகில் சென்று கொண்டிருந்தபோது நித்யாவிற்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் அவரது கைப்பையில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனையடுத்து நகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த நித்யா கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.