Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற முதியவர்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

முதியவர் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தில் வரதராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு திருப்பூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முதியவர் ஊருக்கு சென்ற மறுநாள் வரதராஜ் வீட்டின் கதவு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் சடைச்சி என்பவர் உடனடியாக வரதராஜ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வரதராஜ் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி பீரோவில் இருந்த பணம் திருடு போயிருந்துள்ளது. இதுகுறித்து முதியவர் தேவாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |