வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தவுலத் நகரில் வங்கி மேலாளரான பூபதிராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த4 1/2 பவுன் தங்கம்,18 ஆயிரம் பணம் ,1/2 வெள்ளி போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பூபதிராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.