மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ராசாம்பாளையம் கிராமத்தில் லாரி டிரைவரான ரத்தினகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தா. பேட்டை வழியாக நாமக்கல்லுக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நகர் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரத்தினகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரத்தினகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரத்தினகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.