மதுரை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காளை பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று ஊருக்கு புகழை சேர்த்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் எதிர்பாராதவிதமாக காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
மேலும் காளை இறந்த செய்தியை கேட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் காளைக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்னர் மேளதாளம் முழங்க காளையை ஊர்வலமாக எடுத்துச் சென்று கிராமமக்கள் அடக்கம் செய்துள்ளனர்.