Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊரே பார்த்து சிரிக்குது…! மௌனம் சம்மதம் தான… திமுக ஆட்சியில் எல்லாம் இரத்து… முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு …!!

தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், இன்னும் 3 மாதம் தான் இருக்கின்றது தேர்தலுக்கு, இந்த கடைசி நேரத்துல 2885 கோடி ரூபாய்க்கு அவசர டெண்டர் விட்டுருக்காங்க. டெண்டர் எடுத்திருக்கின்ற ஒப்பந்ததாரர்கள் தயவுசெய்து ஏமாந்து விடாதீர்கள்.

திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்தவுடனே அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டர்கள் விடப்படும். மனசுல பதிய வைத்துக்கொள்ளுங்கள். கமிஷன் எதுவும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். திமுக ஆட்சிக்கு வந்த உடனே எந்த கமிஷனும் இல்லாமல் முறையா…. நியாயமாக அது ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் கவலைப்படாதீர்கள்.

இத்தகைய ஊழல் அரசு நடத்தி வரக்கூடிய பழனிச்சாமி வெட்கக்கேடு நேர்மை பற்றி பேசுகிறார். அவர் மீதும், அவர்களுடைய அமைச்சர்கள் மீதும் ஆளுநர் கிட்ட பல்வேறு ஆதாரங்களோடு  ஊழல் புகார்களை நாங்கள் ஏற்கனவே கொடுத்து இருக்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கொண்டுபோய் கொடுத்தோம். கவர்னர் அதுக்கு எங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்.

இதுவரை பழனிச்சாமி அதற்கு பதில் சொல்லி இருக்கிறாரா ? விளக்கம் கொடுத்திருக்கிறாரா ? எந்த அமைச்சர்களாவது பதில் சொல்லி இருக்கிறார்களா ? மௌனம் சம்மதம் போல தான் இருக்கிறார்கள். முதல்வர் பழனிச்சாமி நான் உழைப்பவர்…  உழைப்பவர்… என்று அவரே பேசுகிறார். உழைத்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்லியிருக்கிறார். பழனிச்சாமி உழைப்பே தான் இந்த ஊரே பார்த்து சிரிச்சதே.  நாடே பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது.

ஊர் பார்த்து சிரிக்கிற முதல்வர் பழனிசாமி என்னை பார்த்து நான் நடிக்கிறதா சொல்லிக் கொண்டிருக்கிறார். நடிக்க வேண்டிய அவசியம் இந்த ஸ்டாலினுக்கு அவசியமில்லை, தேவையும் இல்லை. ஆட்சி முடிய போகிறதுனால விவசாயி போல நடிக்கிறது பழனிச்சாமியை போல  நான் அல்ல. நான் உழைத்து… அரசியலில் தியாகம் செஞ்சி…  முன்னுக்கு வந்தவன் என்கிறது நாட்டு மக்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |