கலெக்டர் அலுவலகத்தில் 7 மீனவ குடும்பத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் குடியிருப்பில் வசித்து வரும் பிரபாகரன் உட்பட 7 மீனவ குடும்பத்தினரை கடந்த ஒன்றரை வருடங்களாக பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதுகுறித்து 7 மீனவ குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். அதை ரத்து செய்யவேண்டும். ஒன்றரை வருடங்களாக எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் வாழ்வாதாரம் பாதித்தது.
மேலும் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதை வலியுறுத்தி 7 மீனவ குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.