ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 11 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அருகே இருக்கும் சிறைக்குளம் ஊராட்சி கழநீர்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரை பொது பிரச்சனை காரணமாக சென்ற எட்டு வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மேலும் பொதுக் கண்மாயில் குளிக்கவும் குடிநீர் குழாய் பயன்படுத்தவும் தடை விதித்ததாக சொல்லப்படுகின்றது.
இது குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி 11 பேரும் தங்களின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தார்கள்.