Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 2 குடும்பத்தினர்…. என்ன காரணம்….?? மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கரிசல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன் உட்பட சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது உறவினர் குடும்பத்தினரும் வீடு கட்டி அருகருகே வசித்து வருகிறோம். இந்நிலையில் மற்றொரு உறவினரின் குடும்பத்தினர் எங்களுக்கு சொந்தமான இடத்தில் பாதை விட வேண்டும் என கேட்டதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம்.

ஆனால் உறவினர் குடும்பத்தினர் ஊர் கூட்டத்தை கூட்டி எங்களிடம் பாதைக்கு இடம் வழங்கும் படி மீண்டும் கூறியபோதும் நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். இதனால் எங்கள் 2 குடும்பங்களையும் ஊர் முக்கியஸ்தர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |