Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊரோடு ஒத்து வாழனும் …. நீதிமன்றம் போய், கலகம் செய்யுறாரு…. ஓபிஎஸ்-ஸால் வேதனையா இருக்கு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடைபெற்றால் கண்டனத்திற்குரியது, அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் மன உளைச்சலில் இருக்கிறார் என்கீறீர்கள் அல்லவா ?  எதுக்கு இந்த மன உளைச்சல்,ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று எதற்காக சொன்னார்கள், இது போன்ற ஒட்டுமொத்தமாக எல்லாருமே வரும்போது ஒரு குடை. அந்த ஒரு குடை  என்பது ஒற்றை தலைமை, அந்த ஒற்றை தலைமையில் எல்லா கட்சி தொண்டர்களும் வந்து விட்டார்கள், நம்மளும் தான ஆதரவு கொடுக்க வேண்டும்.

ஆதரவு கொடுக்காமல் வீணாக நீதிமன்றம் அணுகுவது, தேர்தல் ஆணையத்தை அணுகுவது, பிரச்சனைகளை உருவாக்குவது, இதெல்லாம் அவருக்கு மன உளைச்சல் அல்ல,  கட்சிக்காரர்களுக்கு தான் மன உளைச்சல், தொண்டர்களுக்கு தான் மன உளைச்சல். தொண்டர்கள் தான் இன்றைக்கு எப்படிப்பட்ட இயக்கம்.  தலைவர் ஆரம்பித்த இயக்கம்.  அம்மா கட்டி காத்த இயக்கம். நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.

இப்படி ஓபிஎஸ் அண்ணன் வந்து ஒரு கலகம் செய்கின்ற அளவிற்கு ஒரு பெரிய அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்துவிட்டார். அப்படி என்ற ஒரு ஆதங்கம் என்பது கட்சிக்காரர்கள் மத்தியில் தான் இருக்கிறது.  என்னைப் பொருத்தவரையிலும் சொல்கிறேன் எந்த ஒரு வன்முறை வன்முறைக்கு தீர்வாகாது, இது ஜனநாயகம் மலர்ந்த கட்சி இது. எனவே அந்த வகையில் எந்த செயலாக இருந்தாலும் கண்டிக்கத்தக்க விஷயம் அதில் மாறுபட்ட கருத்து கிடையாது என தெரிவித்தார்.

Categories

Tech |