Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊர்களில் சுற்றி திரியும் பன்றிகளை பிடியுங்கள்”…. சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!

பன்றிகளை பிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே இருக்கும் கட்டிமேடு, ஆதிரங்கம், சேகல் உள்ளிட்ட ஊராட்சிகளில் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் வகையிலும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பன்றிகள் ஊருக்குள்ளே சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு காய்ச்சல், சுகாதாரக் சீர்க்கேடு, பயிர்களை நாசப்படுத்துவதால் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் காட்டி மேடு பள்ளிவாசல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இந்த சாலை மறியலில் பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். பின் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |