Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர்ல இருக்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா…? அண்ணாமலை பேச்சு..!!!!!

தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி தமிழக பாஜக சார்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சுமார் 60 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றாக கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என கூறி இருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை செய்தியாளர்களை பார்த்து ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விக்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா..? மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல ஏன் சுற்றி சுற்றி வருகின்றீர்கள் என்று ஒருமையில் பேசி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த நிலையில் அதற்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகிறது. இந்த சூழலில் அமைச்சர் மனோ தங்கராஜுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அப்போது அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை விமர்சனம் செய்து வருவது பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதற்கு பதில் அளித்து பேசி அமைச்சர் அவர் பத்திரிகையாளர்களை குரங்கு என தெரிவித்திருக்கிறார். அதற்கு பத்திரிகையாளர்கள் வருத்தப்பட்டார்கள் ஆனால் நீங்கள் வருத்தப்படாதீர்கள் சிலர் தங்களை வைத்து தான் மற்றவர்களை ஒப்பிடுவார்கள் அவர் ஒரு வேலை அப்படி இருப்பதால் கூட சொல்லி இருப்பார் என அமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |