ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட ரத்தின அங்கி பெருமாளுக்கு சாத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பகுதியில் வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு புதிய ரத்தின அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியானது நேற்று நடைபெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. அத்துடன் ரத்திண அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பின்னர் பெருமாளுக்கு சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சீனிவாச பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.