Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர் ஊராக சொல்லி ஏமாத்திட்டீங்களே….! நாங்களும் இதை தான செஞ்சோம்…. திமுக மீது ஈபிஎஸ் தாக்கு …!!

ஊர் ஊராக சென்று பொய் சொல்லி வெற்றிபெற்றது தான் திமுக என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் அறிவிக்கப்பட ஒரு சில அறிவிப்பை மட்டும் நான் சொல்கின்றேன். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதற்காக முதல் கையெழுத்து போடப்படும் என்று திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் சொன்னாரா ? இல்லையா ? எல்லா கூட்டத்திலையும் சொன்னார். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைந்தவுடன் அரசின் முதல் கையெழுத்து போடுவது நீட் தேர்வு ரத்து செய்வதற்காக….. ரத்து செய்தார்களா ? இல்லை.

அவர் மட்டுமா சொன்னாரு, அவர் கட்சி தலைவர்கள் எல்லாரும் சொன்னாங்க, அவருடைய மகன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஊர் ஊராக சொன்னார். ஆனால் இப்போது நீட் தேர்வு ரத்து செய்வதற்க்கு  உண்டான நடவடிக்கை எடுத்தோம் என்று அறிவிப்பில் கொடுத்திருக்கிறார், நிறைவேற்றப்பட்டு விட்டதாம். எங்கு நிறைவேற்றுனீர்கள் ? நாங்க சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் மாதிரி நீங்களும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதே தவிர நீட் தேர்வு ரத்து செய்வதற்கு எந்தவித முகாந்தாரமும் எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள்…. இன்றைக்கு மத்திய அரசே அதை அமல்படுத்தி விட்டது. இந்தியாவிலே அனைத்து மாநிலத்தில் நீட் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தல் நேரத்திலே மாணவர்களையும், பெற்றோர்களையும், இளைஞர்களையும் ஏமாற்றி ஊர் ஊராக பொய்யை சொல்லி அதிமுக அரசாங்கம் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு முயற்சி எடுக்கவில்லை என்ற தவறான பிரச்சாரத்தை முன்வைத்து, அதன் மூலமாக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தவுடனே அதற்கு ஒரு குழுவை போட்டு….  அதற்கு ஒரு கமிஷனை போட்டு….

அதை ஒரு சாக்காக்கிட்டு இன்றைக்கு காலம் கடத்துகின்ற ஆட்சியை திமுக நாடகம் போல நடத்தி கொண்டிருகின்றது. இது உண்மை தான…  மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் மாண – மாணவிகளை  ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டார்கள், அவர்களுடைய பெற்றோர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் இன்றைக்கு அந்த நீட் தேர்வு ரத்து செய்வதற்கு எந்த ஒரு எந்தவித முகாந்திர முயற்சிகளையும் எடுக்கவில்லை. எதோ தீர்மானத்தை நிறைவேற்றி அதன் மூலமாக காலம் கடத்துவதைத்தான் பார்க்கிறோம்.

அதேபோல அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடுமையான போராட்டம் நடத்தினார்கள், சட்ட போராட்டம் நடத்தினோம். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த காரணத்தினால் நாம்மால் வேறு வழி இல்லாமல் நீட் தேர்வை நடத்தவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இதுவரைக்கும் நீட் ரத்து செய்யவேண்டும் என்பது தான் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நிலைப்பாடு, அதில் எந்த மாற்றமும் கிடையாது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Categories

Tech |