Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊழலுக்கு பேர் போன அதிமுக…. மாற்று சக்தி அமமுக தான் – டிடிவி சூளுரை…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், இழுபறியும் நீடித்து வருகிறது. இந்நிலையில் சசிகலாவால் அரசியலில் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில்,ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவரை நம்பி இருந்த டிடிவி தினகரன் மன வருத்தத்தில் இருந்தார். பின்னர் அது ஒருபுறமிருக்க மறுபுறம் தேர்தல் குறித்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் டிடிவி.

இதையடுத்து டிடிவி தினகரன் அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மேலும் தேர்தலுக்கான  தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து பேசிய அவர், “அதிமுக பண மூட்டைகளை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் அந்த மாற்று சக்தி அமமுக” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |