வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தில் அண்ணாதுரை என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் இவருக்கு ஓய்வு பலன்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து அண்ணாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நமது தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 1, 635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவற்றை நீண்ட காலத்துக்கு முடிக்காமல் வைத்திருந்தால் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது. மேலும் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடுவார்கள். இந்நிலையில் இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்தி விடும். எனவே ஊழல் வழக்குகளை தள்ளி வைக்காமல் உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும். மேலும் மனுதாரருக்கு சில பலன்களை தற்போது வழங்க வேண்டும். பின்னர் வழக்கு முடிவுக்கு வந்தபின் மீதி உள்ள பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.