பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு தமிழக அரசு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிரடி ரெய்டுகளை நிறுத்த வேண்டும் என்றம், மதுக்கடையில் நடக்கும் ஊழல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலைவாணன், சேதுராமன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதனையடுத்து மாநில துணை செயலாளர் வேலாயுதம், பொதுசெயலாளர் ராஜா, பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ராமமூர்த்தி உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர். ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.