தமிழக அரசியலில் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, ஜூலை 5ஆம் தேதி திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி புலி வருது புலி வருதுன்னு அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்கிறார். பூனை கூட வராது. தனக்கு பதவி வேண்டும் என்று தமிழக அரசை குறை சொல்லிட்டு இருக்க தேவையில்லை. முதல்ல தன்னோட முதுகை பார்த்துக்கணும். உங்கள் சுயநலத்துக்கு நாங்கள் ஆள் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.