Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊழல்…. ஊழல்…. ஊழலோ ஊழல்…. அரை டஜன் அமைச்சர்கள்… ஸ்டாலின் கடும் தாக்கு …!!

தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசு மீதும், தமிழக அமைச்சரவை மீதும் முக.ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கலந்துகொண்டு தூத்துக்குடியில் பேசிய திமுக தலைவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதில் டாலர் கணக்கில் ஊழல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது எல்.இ.டி பல்ப் ஊழல், கோவை மாநகராட்சி முறைகேடுகள், மின்துறை அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி ஊழல், மின் கொள்முதல் ஊழல், உதிரிபாக கொள்முதல் ஊழல்,  காற்றாலை ஊழல், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாங்கிய வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்.

வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மீது பாரத் நெட் டெண்டர் ஊழல், மக்கள் நலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், குவாரி ஊழல், கொரோனா காலத்தில் 7 ஆயிரம் கோடிக்கு மேல் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை கருவிகள், மருந்துகள், பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்ததில் ஊழலோ ஊழல் நடந்திருக்கிறது.

முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்கள் மீது ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்த ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், அண்ணா பல்கலைக்கழக ஊழல், முட்டை டெண்டர் ஊழல், கொரோனா கால டெண்டர் ஊழல்கள், பொதுப்பணித்துறையில் உள்ள ஊழல்கள், நிலக்கரி வாங்கியதில் ஊழல்  இது தான் தமிழக அமைச்சரவையுடைய அவலட்சணங்கள். இது ஒரு கிரிமினல் கேபினட். இது ஒரு ஊழல் கேபினட். இது ஒரு ஊழல்வாதிகள் நிறைந்த கேபினட். ஊழலுக்காக ஊழல்வாதிகள் ஆல் நடத்தப்படும் ஊழல் கேபினட் என தமிழக அரசை முக.ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |