ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறு சீரமைப்பு துறையின் மந்திரியாக இருந்தவர் கென்யா அகிபா. இவர் அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தன்னுடைய சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, கென்யா அகிபாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் புமியோ கிஷிடாவின் மந்திரி சபையில் இருந்து 4 மந்திரிகள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories