தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பணியாற்றி வருபவர் சிரில் ரமபோசா (70). இவர் தன்னுடைய பார்ம் கேட் என்னும் பண்ணை வீட்டில் இருந்து சுமார் 4 மில்லியன் டாலர் திருடு போனதை தன்னுடைய பதவியை பயன்படுத்தி மறைத்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் குறித்து விசாரணை நடத்திய சுயாதீன குழு தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இதனை ஆய்வு செய்து அதிபர் சிரில் மீது அடுத்த வாரம் ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வருவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும். அதனால் அவரது பதவிக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனை சிரில் மறுத்துள்ளார்.
மேலும் அவர் இந்த பணத்தை நான் ஊழல் செய்து சம்பாதிக்கவில்லை “நான் எருமை மாடுகளை விற்று சம்பாதித்த பணம் இது”. இந்த பணத்தை என்னுடைய பண்ணை வீட்டில் “சோபா மெத்தைகளுக்கு அடியில் வைத்திருந்த போது பணம் திருடு போய்விட்டது”. ஆனால் நான் திருடர்கள் மீது புகார் கொடுக்கவில்லை என கூறியுள்ளார். இதற்கிடையே ஆப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சிரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி விரைவில் தீர்மானிக்க இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது.