Categories
மாநில செய்திகள்

ஊழல் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை…. அரசு அதிகாரிகளுக்கு திடீர் எச்சரிக்கை…. தலைமை செயலாளர் அதிரடி….!!!

அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.

தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஏற்கனவே அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு ஊழியர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதை சுட்டிக்காட்டி துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில் அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு எந்த தடையும் இல்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சில வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு இருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கலாம்.

இந்தத் நடவடிக்கை குற்ற வழக்கு தீர்ப்பு வந்த பிறகும், எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதன் பிறகு அரசு அதிகாரி ஒருவர் ஊழல் செய்யும்போது அது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் காவலர்கள் எடுத்து செல்வார்கள். எனவே ஊழல் அதிகாரிகளின் ஆவணங்களை உயர் அதிகாரிகள் வாங்கி துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். மேலும் ஊழல் அதிகாரியை நீதிமன்றம் குற்றவாளி இல்லை என கூறி தீர்ப்பளித்தாலும் கூட, துறை ரீதியான விசாரணையை நடத்துவதில் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. மேலும் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இறையன்பு எச்சரித்துள்ளார்.

Categories

Tech |