தேர்தலில் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இரைக்க, பாஜக ஊழல் செய்யாமல் எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் என்று காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்க ஒரு எம்எல்ஏ-விற்கு 100 கோடி கூட பிஜேபியால் கொடுக்க முடிகிறது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க மட்டுமே ஆயிரக்கணக்கான கோடிகளை பிஜேபி செலவிட்டு இருக்கிறது.
மேலும் தேர்தலில் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி அள்ளி இரைக்கிறது. ஊழல் செய்யாமல் எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்” என்ற அவர் கடுமையாக பாஜகவை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.