Categories
மாநில செய்திகள்

ஊழல் செய்வதில் குறியாக நிற்கும் அமைச்சர்கள்…. ஸ்டாலின் விமர்சனம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகில் திருப்பத்தூர் மாவட்ட 4 சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்துத்  ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்களிடம் பேசுகையில் அதிமுக பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிமுகவில் உள்ள மணி பெயர் போன்ற மூன்று அமைச்சர்கள் அதாவது வேலுமணி, தங்கமணி, வீரமணி, ஆகியோர் மணி (பணம்) சேர்ப்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர் எனக் குற்றம் சாட்டினார்.

நான் முதலமைச்சர் ஆனால் தமிழக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்வேன். விவசாய கடன் 12 ஆயிரம் கோடியில் தமிழக அரசு தற்போது 5 ஆயிரம் கோடியை மட்டும்தான் தள்ளுபடி செய்துள்ளது மீதமுள்ள 7 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்வேன் எனவும் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட ஐந்து பவுனுக்குஉட்பட்ட நகை கடன் தள்ளுபடி, பெண்களுக்கான உரிமை தொகை ரூபாய் 1000 மற்றும் பெண்களுக்கு உள்ளூர் பேருந்துகளில் இலவச பயணம், 40 விழுக்காடு வேலை வாய்ப்பு, கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கியில் பெற்ற மகளிர் சுய உதவி குழுக் கடன் தள்ளுபடி, எனப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

Categories

Tech |